மேலும் செய்திகள்
வண்ணார் சமூகத்தினருக்கு மானியத்துடன் வங்கி கடன்
05-Jan-2025
சிவகங்கை: ஆதிதிராவிட, பழங்குடியின சமூக மேம்பாட்டிற்காக தாட்கோ மூலம் மானிய கடன் வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, ஆதிதிராவிட, பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் http://newscheme.tahdco.comஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பு தொகையில் 35 சதவீதம் அல்லது ரூ.3.5 லட்சம். இதில் எது குறைவோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.தவணை தொகையை தவறாமல் திரும்பி செலுத்தினால், மேலும் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கையில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்றார்.
05-Jan-2025