உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் பத்திரபதிவு அலுவலகம் திடீர் இடமாற்றம்

மானாமதுரையில் பத்திரபதிவு அலுவலகம் திடீர் இடமாற்றம்

மானாமதுரை: மானாமதுரையில் பத்திரப்பதிவு துறை சார்பதிவாளர் அலுவலகம் எவ்வித முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டதால், பத்திரம் பதிய வருவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மானாமதுரையில் அண்ணாதுரை சிலை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில்பத்திரபதிவு துறை சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டுவந்தது. இங்கு மானாமதுரையை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்த்திபனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பத்திரம் பதிந்து வந்தனர். இக்கட்டடம் கட்டப்பட்டு நீண்ட காலமாகி விட்டதால் ஆங்காங்கே சேதமடைந்து மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து ஆவணங்கள் சேதமடைந்து வந்தன. இதனைத் தொடர்ந்து புதிய கட்டடம் கட்ட வேண்டுமென்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டும் பணி துவக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது செயல்பட்டு வந்த அலுவலகம் நேற்று முதல் மானாமதுரை இந்தியன் வங்கி அருகே உள்ள ஒரு கட்டடத்திற்கு எவ்வித முன்அறிவிப்பின்றி மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பத்திரம் பதிய வந்தவர்கள் அலுவலகம் மாறியது தெரியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை