உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அறுவடைக்கு தயாரான கரும்பு நோய் தாக்கி பாதிப்பு

 அறுவடைக்கு தயாரான கரும்பு நோய் தாக்கி பாதிப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 10 மாதம் பாதுகாத்து வளர்த்த கரும்பு பயிரில் ஓட்டைகள் விழுந்து சாய்ந்ததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இப்பகுதியில் பிரான்மலை, வேங்கைப்பட்டி, எஸ்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். பிரான்மலை அருகே விவசாயி ஒருவரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர் மர்ம நோயால் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்துள்ளது. பூச்சி தாக்குதலா அல்லது எலிகளின் வேலையா என தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஆர்.பொன்னழகு, விவசாயி பி.மகுபட்டி; கணவரது 35 சென்ட் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தோம். 10 மாதங்கள் தண்ணீர் பாய்ச்சி பாதுகாத்து வளர்த்த நிலையில் சில மாதங்களாக கரும்புகளில் ஓட்டை விழுந்து அனைத்து கரும்புகளும் சாய்ந்து விட்டது. பூச்சி தாக்குதலா அல்லது எலிகளால் ஏற்பட்ட பாதிப்பா என தெரியவில்லை. ரூ.45 ஆயிரம் வரை செலவிட்டுள்ளோம். கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து எங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்