உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கொடுக்கல் வாங்கலில் தற்கொலை

 கொடுக்கல் வாங்கலில் தற்கொலை

இளையான்குடி: இளையான்குடி பெரும்பச்சேரி கணபதி நகர் மணிகண்டன் 42, இவர் எமனேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குளிர்பான மொத்த ஏஜன்ட் பழனிச்சாமி 63, என்பவரிடம் குளிர்பானம் வாங்கி விற்பனை செய்துள்ளார். இவர்களுக்கிடையே குளிர்பானங்களை விற்பனை செய்வதில் பிரச்னை இருந்துள்ளது. பழனிச்சாமி மணிகண்டனிடம் பணத்தை கேட்ட போது அவரையும்,அவரது மனைவியையும், அசிங்கமாக பேசியதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மணிகண்டன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இளையான்குடி போலீசார் கடிதத்தை கைப்பற்றி பழனிச்சாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !