தாசில்தார்கள் மீண்டும் மாற்றம்
சிவகங்கை: சிவகங்கையில் நேற்று முன்தினம் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 2 ம் கட்டமாக மீண்டும் அந்தபட்டியலில் உள்ள தாசில்தார்களை மாற்றம் செய்துள்ளனர். அதன்படி சிவகங்கை தாசில்தார் எம்.சிவராமனை, சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் ஆதிதிரவிடார் நல தாசில்தாராக மாற்றம் செய்திருந்த நிலையில், மீண்டும் அவரை ஹிந்து அறநிலைய உதவி கமிஷனர் அலுவலக தனி தாசில்தாராகவும், ஏற்கனவே சிவகங்கை கோட்டாட்சியர் பி.ஏ., வாக இருந்த டி.வெங்கடேைஷ, ஏற்கனவே ஹிந்து அறநிலைய உதவி கமிஷனர் அலுவலக தனி தாசில்தாராக நியமித்த நிலையில், மீண்டும் அவரை, சிவகங்கை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராக மாற்றம் செய்துள்ளனர். ////