உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிளஸ் 2 கணித பாட கடினமான பகுதி நீக்க ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை

பிளஸ் 2 கணித பாட கடினமான பகுதி நீக்க ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை

சிவகங்கை: பிளஸ் 1, பிளஸ் 2 கணித பாடத்தில் உள்ள கடினமான பகுதிகளை நீக்க கோரி கணித ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் முகாமில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். கோரிக்கை மனுவை முகாம் அலுவலரான சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் கொடுத்தனர்.கணித ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழக அரசு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை 2019ல் அறிமுகப்படுத்தியது. கடினமான பகுதிகளை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை சி.பி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., கல்வித் திட்டத்தில் தங்களது பாடத்திட்டத்தை இரண்டு முறை 30 சதவீதம் வரை குறைத்துள்ளது. நமது பாடத்திட்டத்தில் நீட், ஜெ.இ.இ., தேர்வுக்கு பயன்படாத சில பாடங்கள் இடம் பெற்றுள்ளன.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் கணிதத்தில் ஒவ்வொரு பயிற்சியிலும் அதிக கணக்குகள் இருப்பதால் மாணவர்கள் கணித பாடம் மிகவும் கடினமாக உள்ளது என்று கருதி கணித பிரிவு எடுத்து படிப்பதற்கு தயங்குகின்றனர். இதனால் பல கல்லுாரியில் பி.எஸ்.சி., கணித பிரிவு நீக்கப்பட்டுள்ளது.எனவே பிளஸ் 1, பிளஸ் 2வில் கணித பாடத்தில் உள்ள பாடச்சுமையை குறைப்பதற்காக நேற்று நடைபெற்ற விடைத்தாள் திருத்தும் பணியில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டதோடு கணித பாடத்தில் பாடச்சுமையை குறைத்து செய்முறை பயிற்சி சேர்ப்பதற்கான கோரிக்கை மனுவையும் முகாம் அலுவலர் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் வழங்கியதாக கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி