மேலும் செய்திகள்
கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
04-Sep-2025
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் 3 கோயில்கள், ஒரு சர்ச்சில் தங்க நகை, உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது. தேவகோட்டை அருகே வாடிநன்னியூரைச் சேர்ந்தவர் அறிவுசெல்வன் 50. இவர் கருப்பர் கோயில் பூஜாரியாக உள்ளார். செப்.,5 காலை 9:00 மணிக்கு பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி சென்றார். மதியம் 2:00 மணிக்கு கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அருகில் இருந்தவர்கள் பூஜாரிக்கு தகவல் கொடுத்தனர். பூஜாரி அறிவுசெல்வன் மற்றும் கிராமத்தினர் கோயிலின் உள்ளே சென்று பார்த்தனர். கோயிலில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 7 கிராம் எடையுள்ள பொட்டு தாலியை திருடர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அறிவுச் செல்வன் தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். முப்பையூர் அருகே மேக்காரைக்குடியில் உள்ள பிள்ளையார்கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். மேக்காரைக்குடி திருநாவுக்கரசு 55, தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். தேவகோட்டை தாலுகா கீழக்காவனவயலில் உள்ள காவல் கொழுஞ்சி அய்யனார் கோவிலில் உள்ள உண்டியலையும் மர்ம நபர்கள் உடைத்து அதில் உள்ள பணத்தை திருடி சென்றுள்ளனர். கீழக்காவனவயல் நீலமேகம் 45, தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். *சிவகங்கை அருகே சூரக்குளம் ரோட்டில் உள்ள யோகோவின் சர்ச்சில் பூட்டை உடைத்து சர்ச்சில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், இன்வெர்டர், பேட்டரி, 10 சேர்களை திருடி சென்றுள்ளனர். புதுார் பூமிநாதன் 65, சிவகங்கை தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் 3 கோயில்கள் சர்ச்சில் திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
04-Sep-2025