மழைநீர் கூட செல்லாத பெரியாறு கால்வாய்
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மழைநீர் கூட செல்ல முடியாத அளவிற்கு பெரியாறு கால்வாயில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.மதுரை மாவட்டம் புலிப்பட்டியிலிருந்து சிங்கம்புணரி வழியாக திருப்புத்துார் வரை பெரியாறு நீட்டிப்பு கால்வாய் செல்கிறது. இக்கால்வாய்களில் கருவேல மரங்கள், புதர்கள் கால்வாயை மறைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இக்கால்வாயில் இன்னும் தண்ணீர் திறக்கப்படாத நிலையிலும் கால்வாயை ஒட்டிய நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை நீர் கால்வாயின் வழியாக ஓடிவந்து சில கண்மாய்களில் கலக்கிறது. ஆனால் கருவேல மரங்கள், புதர் மற்றும் கொட்டப்பட்டுள்ள கழிவுகளால் மழை நீர் கண்மாய்களுக்கு முழு அளவில் சென்றுசேர முடியாமல் வீணாகி வருகிறது.