உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அயோத்திக்கு புறப்பட்ட ரயில்

அயோத்திக்கு புறப்பட்ட ரயில்

மானாமதுரை- மானாமதுரையிலிருந்து அயோத்திக்கு 3 வது முறையாக சிறப்பு ரயிலில் சென்றவர்களை பா.ஜ.,வினர் வழி அனுப்பி வைத்தனர்.அயோத்தியில் கடந்த ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.சலுகை கட்டணத்தில் ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து நேற்று முன்தினம் இரவு 9:45 மணிக்கு சிறப்பு ரயில் அயோத்திக்கு சென்றது.6 நாட்கள் பயணம் நேரமாகும். ஒருவருக்கு ரூ.3100 கட்டணம் வசூல் செய்யப்பட்டு உணவு, தங்குமிடம், ராமர் கோயிலில் தரிசனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரயில் கிளம்பிய போது ரயில்வே நிர்வாகிகள் தனசேகரன், இசக்கி, மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் பயணிகளை வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ