உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம்

சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம்

சிவகங்கை : சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வருடாபிேஷக விழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் வருடாபிேஷக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை செய்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு, நேற்று காலை யாகசாலை பூஜை நடந்தது. சிறப்பு திருமஞ்சனம், அபிேஷகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் செயல் அலுவலர் நாராயணி தலைமையில் அர்ச்சகர்கள் திருக்கல்யாண பூஜைகளை செய்தனர். நேற்று இரவு சுந்தரராஜ பெருமாள் அனுமன் வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடந்தது.வருஷாபிேஷகம்: பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ள ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் வருஷாபிேஷகத்தை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. துளசிமாடம், விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் பஜனை பாடி ரகுமாயி சமேத பாண்டுரங்கனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, வருஷாபிேஷக பூஜை செய்தனர். ரகுமாயி சமேத பாண்டுரங்கன் 'சொர்ண' அலங்காரத்தில் காட்சி அளித்தார். இரவு உட்பிரகாரத்தில் சுவாமி உற்ஸவம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி