உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுந்தரராஜ பெருமாளுக்கு வருடாபிேஷகம் இன்று திருக்கல்யாணம்

சுந்தரராஜ பெருமாளுக்கு வருடாபிேஷகம் இன்று திருக்கல்யாணம்

சிவகங்கை, - சிவகங்கை பெருமாள் கோயில் தெருவில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில், வருடாபிேஷக விழா நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம், அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயில் செயல் அலுவலர் நாராயணி தலைமையில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். இன்று காலை 10:30 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு அனுமன் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருவீதி புறப்பாடும் நடைபெறும்.இன்று காலை சிறப்பு அபிேஷகத்துடன் ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில் வருடாபிேஷக விழா நடைபெறுகிறது. பாண்டுரங்கன் சன்னதியில் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி வழிபடுவர். சிறப்பு அபிேஷகம், அர்ச்சனையுடன், அலங்காரத்தில் ரகுமாயி சமேத பாண்டுரங்கன் பக்தர்களுக்கு எழுந்தருள்வார். இரவு சுவாமி உட்பிரகார புறப்பாடும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி