உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்குறள் முற்றோதல் மாணவிக்கு பரிசு

திருக்குறள் முற்றோதல் மாணவிக்கு பரிசு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவியின் திருக்குறள் முற்றோதலுக்கு அமைச்சர் சாமிநாதன் பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தார். இப்பள்ளியின் மாணவி புவனதர்ஷிணி 1330 திருக்குறள் பாக்களையும் முற்றோதல் செய்து சிவகங்கை மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதனை பாராட்டி அரசு வழங்கும் “குறள் செல்வி” பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ரூ15,000க்கான காசோலையை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். குறள் செல்வி புவனதர்ஷிணியை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ