உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருப்புத்துார் பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்

 திருப்புத்துார் பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்

திருப்புத்துார்: திருப்புத்துார் பேரூராட்சி செயல் அலுவலர் பணிகளை சரியாக மேற்கொள்ளாததால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் நவ.14,15 ஆகிய நாட்கள் துணை முதல்வர் உதயநிதி பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அதிகாரிகளின் சிறப்பு குழுவினர் பல இடங்களில் ஆய்வு செய்தனர். அதில் திருப்புத்துார் பேரூராட்சியில் டெண்டர் விடப்பட்ட பணிகள் துவக்காமல் இருந்தது. நகரில் குப்பை அகற்றாதது,பஸ் ஸ்டாண்டில் துப்புரவுப்பணி நடக்காதது தெரியவந்தது. இதனையடுத்து பேரூராட்சி செயல் அலு வலருக்கு நோட்டீஸ் விடப்பட்டது. செயல் அலுவலர் நடராஜன் அளித்த பதில் திருப்தி தராததை அடுத்து செயல் அலுவலர் நவ.20ல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் திருப்புத்துார் பேரூராட்சிக்கு (பொ) அலுவலராக நியமிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்