உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பணம் தர மறுத்த முதியவரை தாக்கியவர்கள் கைது

பணம் தர மறுத்த முதியவரை தாக்கியவர்கள் கைது

சிவகங்கை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் 70. இவர் கவுரிப்பட்டியில் உள்ள சிவா என்பவரது தோட்டத்தில் வாட்ச்மேனாக கடந்த 4 மாதமாக பணிபுரிகிறார். இவரிடம் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் 33, மேலுார் அருகே மேலவலசை பகுதியை சேர்ந்த மருதுபாண்டி 25, கீரங்குளத்துப்பட்டி பிரகாஷ் 24, கவுரிபட்டி விக்கி 21 பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆறுமுகம் பணம் தர மறுத்துள்ளார். ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆறுமுகத்தை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஆறுமுகம் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாலுகா போலீசார் ஆறுமுகம், மருதுபாண்டி, பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ