உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொங்கல் தொகுப்பு பெற நாளை கடைசி நாள்

பொங்கல் தொகுப்பு பெற நாளை கடைசி நாள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பினை பெறாத 62 ஆயிரத்து 396 கார்டுதாரர்கள் நாளை (ஜன.,18) க்குள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடை மூலம் அரிசி கார்டுதாரர்கள் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது.இம்மாவட்டத்தில் உள்ள 829 ரேஷன் கடைகளுக்கு 4 லட்சத்து 16 ஆயிரத்து 476 கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை ஒதுக்கீடு செய்தது. ஜன. 13 முதல் ரேஷன் கடையில் பொருட்களை வினியோகம் செய்தனர். பொங்கல் விழா முடிந்த நிலையில் தொகுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில், தொகுப்பு பெறாத கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதத்தில் விடுபட்ட 62 ஆயிரத்து 396 கார்டுதாரர்கள் நாளைக்குள் (ஜன. 18 ) ரேஷன் கடைகளில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ