ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
எஸ்.புதுார்; எஸ்.புதுார் ஒன்றியத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் எஸ்.புதுார் வட்டார வளமையத்தில் நடந்தது.115 ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமரன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். மாநில ஆராய்ச்சி கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் மெய்யாத்தாள், வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜெயலட்சுமி, அப்சரா பானு, தலைமை ஆசிரியர் பர்வதம் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.