உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண்ணுக்கு தொந்தரவு

பெண்ணுக்கு தொந்தரவு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் நேற்று முன்தினம் இரவு சிவகங்கை அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். அதிகாலை 2:00 மணிக்கு சிகிச்சைக்கு வந்த உறவினருக்கு உதவியாக வந்த மானாமதுரை அருகே குருந்தங்குளத்தை சேர்ந்த செல்லப்பாண்டி 55 போதையில் அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பெண்ணின் தாய் கொடுத்த புகாரில் போலீசார் செல்லப்பாண்டியை கைதுசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி