மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற இருவர் கைது 6 கிலோ கஞ்சா பறிமுதல்
28-Aug-2025
சிவகங்கை: சிவகங்கை இன்ஸ் பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் சிவகங்கை மதுரை சந்திப்பு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்தனர். அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. திருப்புத்துார் ரோட்டில் காரை விரட்டி சென்று போலீசார் பிடித்தனர். காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு ஓடினர். போலீசார் விரட்டி பிடித்ததில் இருவர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் புதுப்பட்டி மதன் 22, கோவினிப்பட்டி அர்ஜூன் 21 மற்றும் 17 வயது சிறுவன் 3 பேரும் புதுப்பட்டியை சேர்ந்த முருகன் 27 என்பவரிடம் ரூ.30 ஆயிரம் பெற்று காரில் 3 கிலோ கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது. மதன் மற்றும் அர்ஜூன் கைது செய்து 3 கிலோ கஞ்சாவுடன் காரை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 17 வயது சிறுவன் மற்றும் முருகனை தேடி வருகின்றனர்.
28-Aug-2025