உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிப்பில்லாத பூங்காக்கள் காரைக்குடியில் சுகாதாரக்கேடு

பராமரிப்பில்லாத பூங்காக்கள் காரைக்குடியில் சுகாதாரக்கேடு

காரைக்குடி : காரைக்குடி சூடாமணிபுரத்தில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.காரைக்குடி நகராட்சியில் சூடாமணிபுரம், ரயில்வே ரோடு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிறுவர் பூங்காக்கள் உள்ளன. பல பூங்காக்கள் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கிறது. மின் விளக்கு இல்லாமல் இருளில் மூழ்கி கிடப்பதோடு புதர்கள் மண்டி காணப்படுகிறது. நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சூடாமணிபுரம் மக்கள் கூறுகையில்: சூடாமணிபுரத்தில் ரோஜா, மல்லி, செம்பருத்தி, தாமரை உள்ளிட்ட 18 வீதிகள் உள்ளன. சூடாமணிபுரத்தின் நுழைவு வாயிலில் பல லட்சம் செலவில் குழந்தைகளுக்காக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் நுழைவுவாயிலில் நகராட்சி சார்பில் குப்பை கொட்டப்பட்டு தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது.இதனால் அப்பகுதி 10க்கும் மேற்பட்ட குப்பை வண்டி, குப்பைத் தொட்டிகளுடன் மினி குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி