உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிப்பில்லாத நிழற்குடை சிவகங்கையில் பல லட்சம் வீண்

பராமரிப்பில்லாத நிழற்குடை சிவகங்கையில் பல லட்சம் வீண்

சிவகங்கை: சிவகங்கை நகரில் பல இடங்களில் அமைக்கப்பட்ட நிழற்குடை பராமரிப்பில்லாமல் உள்ளது. நிழற்குடைகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை நகரில் இளையான்குடி அம்பேத்கர் சிலை அருகே உள்ள பயணிகள் நிழற்குடை பராமரிப்பு இன்றி இருக்கைகள் இன்றியும் தரைதளம் சேதம் அடைந்தும் காணப்படுகிறது.மானாமதுரை ரோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பஸ் நிறுத்த நிழற்குடையும் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. நிழற்குடையை மறைத்து கொடி கம்பங்களை ஊன்றியுள்ளனர், மன்னர் துரை சிங்கம் அரசு கலைக் கல்லுாரி அருகே உள்ள நிழற்குடையில் வெயிலுக்கும் மழைக்கும் மாணவர்கள் நிற்கமுடியாத சூழல் உள்ளது. மேலுார் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள நிழற்குடையில் இருக்கைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. போக்குவரத்து பணிமனை அருகே உள்ள நிழற்குடையில் படிகள் இன்றி குப்பை நிறைந்து காட்சி அளிக்கிறது.நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள நிழற்குடைகளை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி