உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  விடுமுறைக்கு வந்தவர் விபத்தில் பலி

 விடுமுறைக்கு வந்தவர் விபத்தில் பலி

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் 37. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியவர் நேற்று காலை காரைக்குடி பாண்டியன் நகரில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்றுள்ளார். சித்தப்பா மகனை அருகில் உள்ள பள்ளி ஒன்றில் இறக்கி விட்டு ஊருக்கு பைக்கில் திரும்பினார். பாண்டியன் நகர் அருகே திருச்சி காரைக்குடி நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த மினி லாரியில் மோதி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்