உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அழகப்பா பல்கலையில் ரூ.11 கோடிக்கு  ‛வளர் தமிழ் நுாலகம்: புத்தகம் எதிர்பார்ப்பு

அழகப்பா பல்கலையில் ரூ.11 கோடிக்கு  ‛வளர் தமிழ் நுாலகம்: புத்தகம் எதிர்பார்ப்பு

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலையில் ரூ.11 கோடியில் கட்டப்பட்டு வரும் 'வளர்தமிழ் நுாலகத்தில்' இடம் பெற தமிழ் ஆர்வலர்கள் புத்தகங்களை வழங்குமாறு பல்கலை நிர்வாகம் கேட்டுள்ளது.இப்பல்கலை வளாகத்தில் ஆடிட்டோரியம் அருகே ரூ.11 கோடியில் 'வளர் தமிழ் நுாலகம்' கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நுாலகத்தில் தரைத்தளம், 2 மாடியுடன் நுாலக கட்டடம் தயாராகி வருகிறது. விரைவில் இந்த நுாலகத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளது.நுாலகத்தை மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கூடுதல் இருக்கை வசதிகளுடன் திறக்கப்பட உள்ளது.தமிழ் ஆராய்ச்சி, மாணவர்கள் உயர்படிப்பிற்கு தேவையான புத்தகங்கள் இடம் பெற உள்ளன. நுாலக கட்டுமான பணி முடிந்து, விரைவில் திறக்கப்பட உள்ளன. இந்த கட்டடம் முற்றிலும் பல்கலை நிர்வாகத்தின் கீழ் செயல்படும்.

'நன்கொடை' புத்தகம் எதிர்பார்ப்பு

பல்கலை பதிவாளர் ஏ.செந்தில்ராஜன் கூறியதாவது, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தமிழ் ஆர்வம் மிகுந்த குடும்பத்தினர் அதிகம் உள்ளனர். அக்குடும்பங்கள் பல தலைமுறைகளாக தமிழ் நுால்களை வாங்கி படிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளது.அந்நுால்கள் இன்றைக்கும் பலரது வீடுகளில் பாதுகாப்பாக உள்ளன. அதுபோன்ற நுால்களை இப்பல்கலைக்கு நன்கொடையாக வழங்கி உதவ வேண்டும்.இவற்றை நுாலக அறிவியல் முறைப்படி வகைப்படுத்தி, பலர் படிக்கும் விதத்தில் வசதி செய்யப்படும். புத்தகங்களை நன்கொடையாக தரவிரும்புவோர் தமிழ்துறை தலைவர் எஸ்.ராசாராமிடம் 94428 15567 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை