உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேன்-லாரி மோதல் பக்தர்கள் பலி 4 ஆனது

வேன்-லாரி மோதல் பக்தர்கள் பலி 4 ஆனது

தேவகோட்டை: ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் குழுவாக தைப்பூசத்திற்கு பழநிக்கு பாதயாத்திரை சென்று தரிசனம் முடிந்து ஜன.24ல் சரக்கு வேனில் அழகன்குளம் திரும்பினர். இரவு தேவகோட்டை புறவழிச்சாலை வழியாக தளக்காவயல் சர்வீஸ் ரோட்டில் சென்ற போது எதிரே ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்ற லாரி மீது டிரைவர் துாங்கியதால் மோதியது. இதில் வேன் டிரைவர் முகமது, நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் பலியாயினர்.மேலும் படுகாயமடைந்த ஐந்து பேர் சிவகங்கை, ராமநாதபுரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த அழகன்குளம் முருகேசன் 63, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி