வீரமா காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம்
காரைக்குடி: குன்றக்குடி வீரமாகாளி அம்மன் கோயில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர். இக்கோயிலில் ஏப்., 18 அன்று முதல் கால வேள்வி பூஜையுடன் கும்பாபிேஷக பூஜைகள் துவங்கின. -தொடர்ந்து இரண்டு, மூன்று, நான்காம் கால வேள்வி வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக திருக்குட நன்னீராட்டு விழா நேற்று காலை நடந்தது. பொன்னம்பல அடிகள் தலைமையில், பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் பங்கேற்றனர். சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர்.