உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊருணி ஆக்கிரமிப்பு

ஊருணி ஆக்கிரமிப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே புனித ஊருணியை 'குடி'மகன்கள் ஆக்கிரமிப்பதால் பக்தர்கள் குமுறுகின்றனர்.சிங்கம்புணரி ஒன்றியம்பிரான்மலை ஊராட்சியில் வேளார் குளம் என்ற ஊரணி பழமையானதும் புனிதமானதும் ஆகும். இந்த ஊருணி நீரை கொண்டு தான் திருக்குடுங்கொடுங்குன்ற நாதருக்கு அபிஷேகம் வழிபாடு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த ஊருணியை சுற்றி 'குடி'மகன்கள் மாலை, இரவு நேரங்களில் கூட்டமாக அமர்ந்து மது அருந்திவிட்டு காலி பாட்டில் பிளாஸ்டிக் குப்பைகளை ஊருணியில் வீசி செல்கின்றனர். அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் ஊரணியின் புனிதமும் பாதிக்கப்படுகிறது. கரையில் சீமைக்கருவேல மரங்கள், புதர்களை அகற்றி, 'குடி'மகன்களை தடுக்க ஊராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை