சீரமைக்கப்படாத சாலை தவிக்கும் கிராம மக்கள்
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சீரமைக்கப்படாத சாலையால் இரண்டு கிராம மக்கள் தவிக்கின்றனர். இவ்வொன்றியத்தில் மதுராபுரி, அணைக்கரைப்பட்டி ஊராட்சிகளை இணைக்கும் பிரதான சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு ஆட்டோக்கள் கூட வரமறுக்கின்றன. இச்சாலையை சீரமைக்க பலமுறை வலியிறுத்தியும் குறிப்பிட்ட பகுதி மட்டுமே சரிசெய்யப்பட்டது. இதனால் இரு ஊராட்சி மக்களும் கடும் அவதிப்படுகின்றனர். இச்சாலையை விரைந்து சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.