திருப்புவனத்தில் மழை கடைக்குள் புகுந்த நீர்
திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று மாலை திடீரென கொட்டி தீர்த்த மழையால் கடைகளுக்குள் மழை நீருடன் சாக்கடை நீரும் புகுந்தது. திருப்பு வனத்தில் நேற்று மாலை திடீரென ஆறரை மணிக்கு பலத்த இடி, மின்னல் காற்றுடன் கன மழை பெய்ய தொடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக சேதுபதிநகர், வைகை ஆற்று பாலம் அருகில் மரங்கள் முறிந்து விழுந்தன. மழை நீர் செல்ல வழியின்றி சாலையோர கடைகளுக்குள் புகுந்தது. கடை ஊழியர்கள் தடுப்பு வைத்து சாக்கடை நீரை அகற்றினர். 45 நிமிடம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.