உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் குழாய் சேதம் வீணாகி வரும் குடிநீர்

திருப்புவனத்தில் குழாய் சேதம் வீணாகி வரும் குடிநீர்

திருப்புவனம்: திருப்புவனத்தில் புதியதாக பதிக்கப்பட்ட குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. திருப்புவனம் நகரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக வைகை ஆற்றில் கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் நகரில் புதிய குழாய்கள் பதிக்கும் பணி முடிவடைந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. புதிய குழாய்கள் பதிப்பதில் அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் குழாய்கள் அடிக்கடி சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. குடிநீர் குழாய்கள் பதிக்கும் போது காற்று வெளியேற ஏர்வால்வு தொட்டி அமைக்கப்பட வேண்டும், ஆனால் திருப்புவனம் நகரில் ஒருசில இடங்கள் தவிர பல இடங்களில் ஏர்வால்வு அமைக்கப்படாததால் அழுத்தம் தாங்காமல் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. திருப்புவனம் புதுாரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே கடந்த ஒரு வாரமாக இரும்பு குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. பொதுமக்கள் புகாரையடுத்து உடைந்த குழாயை சரி செய்யாமல் சாக்கு வைத்து கட்டியுள்ளனர். அழுத்தம் காரணமாக குழாய் உடைந்து தண்ணீர் மீண்டும் வீணாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை