உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெரியாறு நீட்டிப்புக் கால்வாயில் 20 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

பெரியாறு நீட்டிப்புக் கால்வாயில் 20 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதி பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் நேற்று முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து உடனடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிங்கம்புணரியில் உள்ள பெரியாறு நீட்டிப்புக் கால்வாய் பாசன கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் நடவுப் பணியை துவக்காமல் இருந்தனர். இப்பகுதிக்கு உடனடியாக தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பும் செய்தனர். இந்நிலையில் நேற்று (அக்.24) இக்கால்வாயில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெரியாறு நீட்டிப்பு கால்வாயில், 38248 ஏக்கர் பாசன பகுதிகளுக்கு, 346 மில்லியன் கன அடி நீரினை, வைகை அணையில் இருந்து பெரியாறு நீட்டிப்புப் பாசன பகுதிகளுக்கு,20 நாட்களுக்கு தலா வினாடிக்கு 200 கனஅடி வீதம், தண்ணீரை அக். 20 முதல் புலிப்பட்டி மதகில் இருந்து திறந்து விட அனுமதி அளித்துள்ளது. நேற்று (அக்.24) மதுரை மாவட்டம் புலிப்பட்டி மதகில் இருந்து தண்ணீரை அதிகாரிகள் திறந்து விட்டனர். ஓரிரு நாளில் தண்ணீர் சிங்கம்புணரி எல்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ