உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் திருக்கல்யாணம்

தேவகோட்டையில் திருக்கல்யாணம்

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை பிரமோற்ஸவ திருவிழா கொடியேற்றம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.தினமும் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து அலங்காரத்தில் வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.ரங்கநாத பெருமாள் சிவன் கோவிலுக்கு எழுந்தருளியதை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. சுந்தரேஸ்வரரிடம் ஆசிர்வாதம் பெற்று மீனாட்சி அம்மன் கழுத்தில் சேது குருக்கள் திருமாங்கல்யம் சூட்டினார்.பக்தர்கள் சுவாமி திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர். வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமி அம்பாள் திரு வீதி உலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை