நாளை திருப்புவனத்தில் வாரச்சந்தை
திருப்புவனம்: தீபாவளி திருநாளை முன்னிட்டு நாளை (18ம் தேதி) சனிக்கிழமை திருப்புவனத்தில் தீபாவளி சிறப்பு சந்தை நடைபெற உள்ளது. திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை கால்நடை சந்தையும், அதன் பின் இரவு வரை காய்கறி சந்தையும் நடைபெறும். தீபாவளி திருநாள் வரும் திங்கள் கிழமை கொண்டாடப்பட உள்ளதால் நாளை சிறப்பு சந்தை நடைபெற உள்ளது.