உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடும்பத்தகராறில் மனைவி கொலை: கணவர் கைது

குடும்பத்தகராறில் மனைவி கொலை: கணவர் கைது

காரைக்குடி:சாக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள பெரியகோட்டை கருத்தாண்டி குடியிருப்பை சேர்ந்தவர் செல்லையா 58. இவர் முதல் மனைவியை பிரிந்தார். இவரது இரண்டாவது மனைவி கருப்பாயி 45. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். செல்லையா வேலைக்கு செல்லாத நிலையில் மனைவி கருப்பாயி வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.இதில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்லையா, கருப்பாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். அவரை சாக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை