மேலும் செய்திகள்
பெண்ணிடம் நகை பறிப்பு
15-Apr-2025
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சந்தை பேட்டையைச் சேர்ந்தவர் சித்ரா, 53. இவரது வீட்டிற்கு, நேற்று முன்தினம் இரவு இரு பெண்கள் வந்துள்ளனர். தனியாக இருந்த சித்ராவிடம், 'உங்கள் மருமகள் மகேஸ்வரி இருக்கிறாரா?' என, கேட்டுள்ளனர்.அப்போது, கதவை திறந்த சித்ராவின் கண்ணில் மிளகாய் பொடியை துாவி, அவர் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்து டூ - வீலரில் தப்பிச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர். -
15-Apr-2025