சிறாவயலில் ஜீவா மண்டப பணி மும்முரம்
நாச்சியாபுரம் : கல்லல் ஒன்றியம் சிறாவயலில் கம்யூ., தலைவர் ஜீவா நினைவு மண்டப பணி நிறைவடைய உள்ளது.சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் ஜீவா 1927ல் காந்தி ஆசிரமம் துவக்கி மாணவர்களுக்கு கல்வி பணியாற்றி வந்தார். அதனை அடுத்து காந்தி இங்கு வந்து ஜீவாவை சந்தித்த வரலாறு பின்னணியை நினைவு கூறும் வகையில் ரூ 2.56 கோடி மதிப்பில் ஜீவா நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. தற்போது 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சி நடத்தவும், அருகிலேயே உணவு அருந்தும் மண்டபமும், சமையலறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இதனால் நினைவு மண்டபமாக அல்லாமல் ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து விரைவில் அரசு உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க உள்ளது. சிறாவயல் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது இந்த நினைவு மண்டபம்.