உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உலக மீட்பர் சர்ச் தேர்பவனி

உலக மீட்பர் சர்ச் தேர்பவனி

தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் சர்ச் நவநாள் திருவிழா ஜூன் 6 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்கு பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்தார். தினமும் மாலையில் திருவிழா திருப்பலியும். மறையுரை நடந்தது. ஒவ்வொரு நாளும் பங்கைச் சேர்ந்த அமைப்புக்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தன. 8 ம் நாள் உலகமீட்பரின் நற்கருணை ஊர்வலம் நடைபெற்றது. ஒன்பதாம் நாள் திருவிழாவில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் தலைமையில், ராம்நகர் பங்கு பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் முன்னிலையில் வட்டார அதிபர் அருள் சந்தியாகு, ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி, ஆரம்ப குருமார்களின் இயக்குநர் தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற திருவிழா கூட்டு திருப்பலி நடந்தது. உலக மீட்பர் தேருக்கு பூஜைகளுக்கு பின் உலக மீட்பர் தேர்பவனி ராம்நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தது. நேற்று காலை பாதிரியார் மனோஜ் சேவியர் திருப்பலி நிறைவேற்றி முதல் இறை உணவு வழங்கினார். பங்கு பேரவை பணியாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ