உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கூட்டுறவு வங்கி கட்டடத்திற்கு பூஜை

கூட்டுறவு வங்கி கட்டடத்திற்கு பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கூட்டுறவு வங்கி கட்டடம் கட்ட பூமிபூஜை நடந்தது.கூட்டுறவுத் துறை சார்பில் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் செயல்படும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 45 ஆண்டுகளுக்குமேலாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு சார்பதிவாளர் அலுவலகம் அருகே புதிய அலுவலகம் கட்ட நேற்று பூமிபூஜை போடப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல்லை நாட்டினார். விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், துணைப்பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவு சார்பதிவாளர் (சிங்கம்புணரி) சுந்தரபெருமாள், பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார், புகழேந்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி