மேலும் செய்திகள்
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு
16-Jul-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே மின்னல்குடிப்பட்டியில் காளியம்மன் கோயில் ஆடி படைப்பு விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு கோயிலில் வழிபாடு முடிந்த பின் தொழுவில் காளைகள் அவிழ்க்கப்பட்டன. தொடர்ந்து கட்டு மாடுகள் அவிழ்க்கப்பட்டன. அதில் மாடு முட்டியதில் மதுரை மேலூர் தாலுகா தெற்குப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக் 22, என்பவர் இறந்தார். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியது குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Jul-2025