மேலும் செய்திகள்
மான் மீது பைக் மோதி விபத்து: இருவர் பலி
28-Oct-2025
மின் கம்பத்தில் மோதிய பஸ்
27-Oct-2025
மின் கம்பத்தில் மோதிய பஸ்
27-Oct-2025
விஷம் வைத்து மயில்கள் கொலை: விவசாயிக்கு காப்பு
26-Oct-2025
தென்காசி :கிராமப்புற நூலகத்தில் படித்து ஐ.ஏ.எஸ்.,தேர்வில் முன்னிலை இடத்தை பெற்றுள்ளார் செங்கோட்டையைச் சேர்ந்த இளம்பெண் இன்பா .தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ஸ்டெல்லா. பீடி மற்றும் பூ கட்டும் தொழில் செய்பவர். இவரது மகள் இன்பா . இந்த ஆண்டு மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் 851வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.கோவை கல்லுாரியில் பி.இ. முடித்த இவர் செங்கோட்டையில் உள்ள அரசு நூலகத்தை தினமும் முழு நேரமும் பயன்படுத்தி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்தார். தமிழக அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் தேர்வு எழுதி மாதம் தோறும் ரூ.7 ஆயிரத்து 500 அரசு நிதி உதவி பெற்று வருகிறார். அண்மையில் அரசு செயல்படுத்தி வரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி பெற்றுள்ளார். இந்த தொகைகள் அவருக்கு புத்தகங்கள், உபகரணங்கள் வாங்க பயனுள்ளதாக இருந்துள்ளது.சென்னையில் ஆல் இந்தியா சிவில் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து கட்டணமின்றி படித்து தேர்வு எழுதினார். மிகவும் வறிய நிலையில் இருந்தாலும் தொடர் கற்றலின் மூலம் அவர் தேர்வில் முன்னிலை பெற்றுள்ளார்.கடந்தாண்டு அவர் எழுதிய மத்திய அரசு தேர்வாணையத் தேர்வில் வெற்றி பெற்று கோவை இ.பி.எப்., அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். மாணவி இன்பா, தாயார் ஸ்டெல்லாவுக்கு தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் வாழ்த்து தெரிவித்தார்.
28-Oct-2025
27-Oct-2025
27-Oct-2025
26-Oct-2025