உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / தென்காசி கலெக்டர் முன் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

தென்காசி கலெக்டர் முன் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

தென்காசி : தென்காசியில் கலெக்டர் முன்பாக மனு கொடுக்க வந்த இருவர் தீக்குளிக்க முயன்றனர்.தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கமல் கிஷோர் நேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் 70, கலெக்டர் அலுவலகத்தில் இரு அடுக்கு போலீஸ் பாதுகாப்பையும் மீறி கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து கலெக்டர் முன்பாக தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். போலீசார், வருவாய் துறையினரை கலெக்டர் கண்டித்தார். போலீசார் அல்போன்ஸ் மீது தண்ணீர் ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.அவர் அதே ஊரை சேர்ந்த சேர்மதுரை என்பவருக்கு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் சேர்மதுரை நான்கு ஆண்டுகளாகியும் பணத்தை திரும்பத் தரவில்லை. இது குறித்து உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி.,யிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விரக்தியில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.இதே போல தென்காசியை சேர்ந்த செண்பகவள்ளி கையில் பெட்ரோல் கேன் கொண்டு வந்திருந்தார். அவர் தீக்குளிக்க முயற்சிக்கும் முன்பாக அதை போலீசார் கண்டுபிடித்து அவரை அங்கிருந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை