உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி /  மோடியை தீர்த்து கட்ட வேண்டும் தி.மு.க. செயலாளர் சர்ச்சை பேச்சு

 மோடியை தீர்த்து கட்ட வேண்டும் தி.மு.க. செயலாளர் சர்ச்சை பேச்சு

தென்காசி: தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் நவ.11ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், “மோடி ஒரு நரகாசுரன்... அவரை தீர்த்து கட்டினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும்” என மேடையில் பேசினார் . இந்த வீடியோ வைரலானது. தென்காசி மாவட்ட பா.ஜ. தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் நிர்வாகிகள் தென்காசி எஸ்.பி., அரவிந்தனிடம் புகார் அளித்தனர். பிரதமரை தரம் தாழ்ந்தும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய ஜெயபாலனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. அவர் மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ