மேலும் செய்திகள்
போலீஸ்காரரை வெட்டிய இருவர் சுற்றிவளைப்பு
06-Dec-2025
விசாரணைக்கு சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு
05-Dec-2025
ஒரு கிலோ மல்லிகை ரூ.7,500க்கு விற்பனை
30-Nov-2025
துாத்துக்குடி: மார்கழி மாதம் முழுதும் திருச்செந்துார் கோவிலில் நடைதிறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
மார்கழி 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து, 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7:30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறும். டிச., 17 மற்றும் ஜன., 1ல் பகல், 2:30 மணிக்கு பிரதோஷ அபிஷேகம் நடைபெறும். ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு மார்கழி 17 அதிகாலை, 1:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். மார்கழி 19ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
06-Dec-2025
05-Dec-2025
30-Nov-2025