மேலும் செய்திகள்
ஒரு கிலோ மல்லிகை ரூ.7,500க்கு விற்பனை
30-Nov-2025
ஆசிரியர் வெட்டிக்கொலை கிரைண்டர் ஆப் லீலையா
30-Nov-2025
பஸ் விபத்தில் தாயை இழந்த பார்வையற்ற மாணவி
26-Nov-2025
தென்காசி: விசாரணைக்கு சென்ற போலீசை அரிவாளால் வெட்டியவரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொத்தையை சேர்ந்தவர் இசக்கி பாண்டி, 30. இவரது மனைவி, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூரை சேர்ந்தவர். தம்பதி பிரச்னையால் மனைவி நெட்டூரில் பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இசக்கி பாண்டி, டிச., 3ம் தேதி இரவில் தன் நண்பருடன் நெட்டூரில் மாமனார் வீட்டிற்கு சென்று, மனைவியை அனுப்புமாறு தகராறு செய்தார். மாமனார் தரப்பில், போலீசுக்கு தெரிவித்தனர். அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் முருகன் உட்பட இருவர் வந்து விசாரித்து, இசக்கி பாண்டியை கண்டித்து அனுப்பினர். அங்கிருந்து கிளம்பி சென்ற இசக்கி பாண்டி, மீண்டும் நண்பருடன் புறக்காவல் நிலையம் சென்று, அங்கிருந்த போலீஸ்காரர் முருகனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டினார். பின், நண்பருடன் தப்பி சென்றார். இசக்கி பாண்டி, அவரது நண்பர் பேச்சிதுரை, 19, ஆகியோரை ஆலங்குளம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
30-Nov-2025
30-Nov-2025
26-Nov-2025