மேலும் செய்திகள்
பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி
15-Dec-2025
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 4 பேர் சாவு
15-Dec-2025
தஞ்சாவூர்:மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கும், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடவும், கடந்த 28-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்றிரவு கல்லணையை வந்து சேர்ந்துள்ளது. இதையடுத்து இன்று கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பகிர்ந்து வழங்கப்படுகிறது. இதையொட்டி, காவிரி ஆறு செல்லும் திருவையாறு புஷ்ப படித்துறை பகுதியில் ஏராளமான குப்பை காணப்பட்டன. அவற்றை அகற்ற முடிவு செய்யப்பட்டது.திருவையாறு பாரதி இயக்கத்தின் பொங்கி வா காவிரி இயக்கம், திருவையாறு பேரூராட்சி நிர்வாகம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், கல்லுாரி மாணவர்கள், திருத்தொண்டர் அறக்கட்டளையினர் இணைந்தனர். காவிரி ஆற்றில் காணப்பட்ட பிளாஸ்டிக் பைகள், துணிகள், கண்ணாடி பொருட்கள் உள்ளிட்ட 3.5 டன் குப்பையை அகற்றினர்.
15-Dec-2025
15-Dec-2025