உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / போதை டிரைவரால் விபத்து பஸ்கள் மோதல்: 43 பேர் காயம்

போதை டிரைவரால் விபத்து பஸ்கள் மோதல்: 43 பேர் காயம்

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு பி.எல்.ஏ., என்ற தனியார் பஸ்சும், கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூருக்கு லிங்கன் என்ற தனியார் பஸ்சும் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியருடன் சென்றன. ஏராளமான மாணவ - மாணவியரும் பயணித்தனர்.இதில், பி.எல்.ஏ., பஸ்சை தஞ்சாவூரைச் சேர்ந்த அருள், 35, லிங்கன் பஸ்சை திருவையாறைச் சேர்ந்த செல்வகுமார், 27, ஓட்டினர். தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலுார் கிராமத்தில் இரண்டு தனியார் பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. விபத்தில், இரண்டு பஸ் டிரைவர்கள் உட்பட 43 பயணியர் படுகாயமடைந்த நிலையில், 25 பயணியர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விபத்தால், தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிரைவர் செல்வகுமார் மது போதையிலும், மொபைல் போனில் பேசியபடி அதிவேகமாக பஸ்சை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக பயணியர் தெரிவித்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை