வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Will the twelth exam and especially English in Tamil Nadu?
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், படுகை புதுத்தெருவைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி - தமிழ்ச்செல்வி தம்பதியின், இரண்டாவது மகள் ஆர்த்திகா, 17; பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்தார். பொதுத்தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்த ஆர்த்திகா, நேற்று முன்தினம், வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில், சுடிதார் துப்பட்டாவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாபநாசம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆர்த்திகா தேர்வு முடிவுக்கு பயந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், பிளஸ் 2 முடிவுகள் நேற்று வெளியானதில், ஆர்த்திகா தமிழ், 72, ஆங்கிலம், -48, இயற்பியல், -65, வேதியியல், -78, உயிரியல், -70, விலங்கியல், -80 என, மொத்தம் 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்து இருந்தார்.ஒரு நிமிடத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட ஆர்த்திகா, ஒருநாள் காத்திருந்தால், தான் வெற்றி பெற்றதை நினைத்து துள்ளி குதித்திருப்பார். அச்சத்தில் அவசரப்பட்டு உயிரை விட்டு விட்டார் என, கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.ஆர்த்திகா தாய் தமிழ்ச்செல்வி கூறுகையில், ''என் மகள் நன்றாக படிக்கக் கூடியவர். டியூஷன் கூட போகமாட்டார். தேர்வு எழுதி முடித்துவிட்டு ஆங்கிலத்தில் மட்டும் மதிப்பெண் குறையும் என, புலம்பி வந்தார். மேலும், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற மாட்டோம் என எண்ணி அவர் தற்கொலை செய்து கொண்டதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,'' என்றார்.
Will the twelth exam and especially English in Tamil Nadu?