மேலும் செய்திகள்
பேருந்து படியில் பயணம்: கல்லுாரி மாணவர் மரணம்
28-Oct-2025
தந்தை - மகன் ரயில் மோதி பலி
28-Oct-2025
மாணவன் தற்கொலை வழக்கு பள்ளி ஆசிரியருக்கு கம்பி
26-Oct-2025
கணவருக்கு ஆயுள் தண்டனை விரக்தியில் பெண் தற்கொலை
25-Oct-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், தெற்கு அலங்கம் பகுதிகளுக்கு வருபவர்களுக்கு போதிய கார் பார்க்கிங் வசதி இல்லை. இதற்கு தீர்வு காணும் வகையில், பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, மாநகராட்சி சார்பில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 2.50 கோடி ரூபாய் செலவில், ஹைட்ராலிக் கார் பார்க்கிங் வசதி உருவாக்கப்பட்டது.மூன்று நிலைகளை கொண்ட ஹைட்ராலிக் கார் பார்க்கிங் வசதியில், இரண்டில் தலா 20 கார்கள் வீதம் 40 கார்களும், மற்றொன்றில் 16 கார்களும், பார்க்கிங் ஏரியாவில் 10 கார்களும் நிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு துவங்கப்பட்ட பணிகள் முடிந்து, 2023 ஜூலை 27ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறப்பு விழாவும் செய்யப்பட்டது. ஆறு மாதங்களாகியும் செயல்பாட்டுக்கு வராமல், பயனற்ற நிலையில் அப்படியே உள்ளது.டெண்டர் விவகாரத்தில் குளறுபடி, கட்டண நிர்ணயம் போன்ற காரணங்களால், கார் பார்க்கிங் பயன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இயந்திர கோளாறு ஏற்பட்டு வீணாகி விடும் எனவும் கூறப்படுகிறது.
28-Oct-2025
28-Oct-2025
26-Oct-2025
25-Oct-2025