மேலும் செய்திகள்
தறிகெட்டு ஓடிய ஆட்டோ ஐந்து பெண்கள் படுகாயம்
10-Oct-2024
தஞ்சாவூர்:திருச்சி, சிந்தாமணி பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன், 34, பழைய இரும்பு பொருட்கள் வியாபாரி. இவரது மனைவி காயத்ரி, 29, மகள் யாழினி, 8. மூவரும் நேற்று தஞ்சாவூருக்கு காரில் வந்தனர். காரை விக்னேஷ்வரன் ஓட்டி வந்தார். பிறகு மாலையில் மீண்டும் திருச்சிக்கு சென்ற போது, தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், புதுக்குடி அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே திடீரென ஆடு ஒன்று ஓடியது.ஆடு மீது மோதாமல் இருக்க, விக்னேஸ்வரன் காரை திருப்பினார். கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்தது. இதில், மூவரும் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில் விக்னேஷ்வரன், யாழினி இறந்தனர்.காயத்ரி, காலில் முறிவு ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். செங்கிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Oct-2024