உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது

ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே ஆடிட்டரை மிரட்டி, 1 கோடி ரூபாய் பறித்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே குலசேகரநல்லுாரில், கொள்ளிடம் பாலம் விரிவாக்கத்துக்காக விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி, தொடர்புடைய நில உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது. இதில், கும்பகோணம்,ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன், 68, என்பவருக்கு சொந்தமான 80 சென்ட் நிலமும் கையகப்படுத்தப்பட்டது.இந்த நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் வெட்டி, வேறு இடத்துக்கு கொண்டு சென்றார். இதையறிந்த வருவாய்த்துறையினர் மரங்களை பறிமுதல் செய்தனர்.இதை அரியலுார் மாவட்டம், திருமாந்துறையை சேர்ந்தவரும், தற்போது தருமபுரி மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் நெப்போலியன், 45, தான் இன்ஸ்பெக்டர் எனவும், கலெக்டர் தன் உறவினர் எனவும் பேசி, நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வைப்பதாக கூறி, 1 கோடி ரூபாய் பெற்றுஉள்ளார். மேலும், அடிக்கடி ரவிசந்திரனிடம் நெப்போலியன் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இது தொடர்பாக, தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவுக்கு எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டார். குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்து, நெப்போலியனை நேற்று இரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

C.SRIRAM
ஏப் 04, 2025 11:23

கைதா. இந்நேரம் அந்த லஞ்ச பேயை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டாமா? அரசு அமைப்புகள் நீதி மன்றங்களையும் சேர்த்து மீதான நம்பிக்கை மிக மிக குறைவு. மக்கள் வரிப்பணம் செலுத்தும் அளவுக்கு மாநில அரசின் சேவைகள் ஏதும் தரமானதாக இல்லை


Perumal Pillai
ஏப் 04, 2025 09:01

நெத்திலி , வால மீன் , சால மீன் தான் மாட்டுது . விலாங்கு , திமிங்கலம் மீன்கள் என்றும்மே மாட்டுவதில்லை .


Kanns
ஏப் 04, 2025 08:55

Hang Such Power Misusing Mega Loot Case Hungry Police in Public In Uniform. No Mercy


Perumal Pillai
ஏப் 04, 2025 08:54

Another honest policeman.


karupanasamy
ஏப் 04, 2025 07:54

அந்த பகுதியில் முசுலிம்களின் நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க இந்த எழவு விடியல் அரசு இந்துமதத்தை சேர்ந்த குடியானவர்களின் விளைநிலங்களை அபகரிக்கின்றது.


shyamnats
ஏப் 04, 2025 07:49

கோன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி . அரசு எந்திரத்தை பற்றி யாருக்கும் பயமில்லை , வேலியே பயிரை மேய்கின்றன . வானிலை அறிக்கை போல் போக்ஸோ கேஸ்கள் தினமும் நம் பத்திரிக்கையில், வேறென்ன கலி முற்றிப்போய் விட்டது.


நிக்கோல்தாம்சன்
ஏப் 04, 2025 07:24

என்ன பொழப்பு நெப்போலியன் இது ? இதற்க்கு உன்னோட குடும்பமும் நண்பர்களும் உடந்தையா ?இந்த மாதிரி பணத்தில் உடலை வளர்த்த அவர்கள் நடத்தை சமூகத்தில் எப்படி இருக்கும் ?


raja
ஏப் 04, 2025 06:26

நமது விடியல் துக்ளக் மாடல் அரசில் இவர் பதவி உயர்வுடன் பசை உள்ள இடத்திற்கு மாற்றம் செயய படுவார் ...


Venkateswaran Rajaram
ஏப் 04, 2025 06:24

இம்மாதிரி காக்கி சட்டை ரவுடிகளால் அனைத்து காக்கி சட்டைகளுக்கும் களங்கம் ஏற்படுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை