மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
கும்பகோணம்: நாச்சியார்கோவில் லேம்ப்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், நடந்த ரத்ததான முகாமில் 50 பேர் ரத்ததானம் வழங்கினர். கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் லேம்ப்சிட்டி ரோட்டரி சங்கம், குடந்தை பகுதி தமிழக ஒளிப்பதிவாளர் பேரவை, கும்பகோணம் மற்றும் நாச்சியார்கோவில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகியோர் இணைந்து ரத்த தானம் மற்றும் ரத்தவகை கண்டறியும் முகாம் நடந்தது. முகாமில், சங்க தலைவர் தெஷ்ணாமூர்த்தி, செயலாளர் இளங்கோவன், குணசேகர், சரவணன், கார்த்திகேயன், மணிவண்ணன் உள்பட 50 பேர் ரத்த தானம் கொடுத்தனர். ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முகாமில் லேம்ப் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். குடந்தை தமிழக ஒளிப்பதிவாளர் பேரவை குடந்தை பகுதி தலைவர் பகலவன், அகிலபாரத ஐயப்ப சேவாசங்க குடந்தை பகுதி தலைவர் பாலமுத்துகுருசாமி, பொருளாளர் சௌந்தர்ராஜன், நாச்சியார்கோவில் தலைவர் தனராமன் முன்னிலை வகித்தனர். டாக்டர் கீதாராஜாராம் முகாமை துவக்கி வைத்தார். ரத்தவங்கி அலுவலர் ராதாகிருஷ்ணன், பரிசுக்குழு உறுப்பினர் முத்தையா, ஐயப்பசேவா சங்க செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்குதல் பற்றி விளக்கமளித்து பேசினர். முகாமில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் உறுப்பினர்கள் பணிபுரிந்தனர். சங்க செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025