உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நில அபகரிப்பு வழக்குகளுக்கு தேனியில் தனிப்பிரிவு தொடக்கம்

நில அபகரிப்பு வழக்குகளுக்கு தேனியில் தனிப்பிரிவு தொடக்கம்

தேனி : நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரணை நடத்த தேனியில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு அதிகாரிகள், போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த பிரிவிற்கான அலுவலகம் எஸ்.பி., அலுவலகத்தின் தரை தளத்தில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அருகே உள்ள அறையில் செயல்படுகிறது. டி.எஸ்.பி.,யாக செல்வராஜ், இன்ஸ்பெக்டராக ராஜ்குமார், மற்றும் நான்கு எஸ்.ஐ.,க்கள், எட்டு தலைமைக் காவலர்கள் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஜீப் உட்பட வாகன வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.அதிக விலை உள்ள நிலத்தை குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கியவர்கள், அரசு, புறம்போக்கு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், ஒரே நிலத்தை பலருக்கு விற்றவர்கள், நிலம் தருவதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்தவர்கள், தவறாக செயல்படும் புரோக்கர்கள் மற்றும் மோசடி செய்தவர்கள் குறித்து இவர்களிடம் புகார் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை